Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும் - தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு

SAMYUKTHA27-04-2024
மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும் - தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தஞ்சை உதவி தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் நேற்று மனு அளித்தனர்.

மக்கள் அதிகாரம் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை நிர்வாகி அருண்சோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர துணை செயலாளர் மூர்த்தி, ஆட்டோ சங்கம் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தஞ்சை வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான இலக்கியாவிடம் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமாக நடப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற பிரதமர் மோடி இதுபோன்று அவதூறு கருத்துக்களையும், மதவெறியை தூண்டும் வகையிலும் பேசியது வண்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி மீது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தனி நபர்கள் பல்லாயிரக்கணக்கானோர் புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். மோடியின் இந்த பேச்சு சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக உள்ளது. தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். உரிய சட்டப்பிரிவு படி மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். மோடியை பிரதமர் பதிவிலிருந்து நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவானது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்