Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஊருக்குள் படையெடுக்கும் யானை கூட்டம் - பொதுமக்கள் பீதி

SAMYUKTHA27-04-2024
ஊருக்குள் படையெடுக்கும் யானை கூட்டம் - பொதுமக்கள் பீதி

கோடை வெயில் கொளுத்தி வருவதால் வனத்திலிருந்து இரை, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் தண்ணீர் தேடி மலையடிவார கிராமப்பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கோடை வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. இந்நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்துள்ள மூலக்காடு என்னும் பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது ஊரின் எல்லையில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீர் அருந்துவதற்கு தொட்டி கட்டி அதில் தினந்தோறும் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் நேற்று அப்பகுதிக்கு குட்டிகளுடன் வந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தங்களது தாகத்தை தொட்டியில் இருந்த தண்ணீரை அருந்தி தீர்த்துக் கொண்டன. இதனை அங்கிருந்த பழங்குடியின மக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்