Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட செக் மோசடி வழக்கு ரத்து ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

27-04-2024
தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட செக் மோசடி வழக்கு ரத்து ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருடப்பட்டதாக கூறப்படும் செக்கை வங்கியில் டெபாசிட் செய்து திரும்பிவந்ததாக கூறி தொடரப்பட்ட செக் மோசடி வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ப்ளோஸின்ட் நியூட்ராசிடிகல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் ரவி. இவர் மீது அன்பரசு என்பவர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 70 லட்சம் ரூபாயை திருப்பித் தரும் வகையில் ரவி அளித்த காசோலை, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி திரும்பி வந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கிறிஞர் கே.சுரேஷ்பாபு, என்.விஜயராஜ் ஆகியோர் ஆஜராகி, மனுதாரரின் நிறுவனத்தில் பணியாற்றி பின்னர் அதே பெயரில் நிறுவனம் நடத்திவரும் அசோகன் என்பவர் மனுதாரர் நிறுவனத்தின் 17 செக்குகளை திருடியுள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தரப்பட்டு அதன் அடிப்படியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கிருஷ்ணகிரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த செக்குகளை வைத்து மனுதாரரை துன்புறுத்தும் நோக்கத்துடன் அவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கிருஷ்ணகிரி நீதிமன்றம் கவனிக்கவில்லை என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், எந்த ஆதாரங்களும் இல்லாமல், அன்பரசு இந்த செக் மோசடி வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி ரவி எதிராக கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள செக் மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்