Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

"கும்பகர்ணனின் தூக்கம் 6 மாதங்கள் தான்: 5 ஆண்டுகளாக தூங்கும் ஆந்திர முதல்வர்" ; சகோதரி ஷர்மிளா விமர்சனம்

CHENDUR PANDIAN.K29-04-2024
"கும்பகர்ணனின் தூக்கம் 6 மாதங்கள் தான்: 5 ஆண்டுகளாக தூங்கும் ஆந்திர முதல்வர்" ; சகோதரி ஷர்மிளா விமர்சனம்

அமராவதி

"கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி 6 மாதங்கள் விழித்திருந்தார். ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்காக எதையும் செய்யாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக தூக்கத்திலேயே இருந்திருப்பதாக" காங்கிரஸ் தலைவரும், அவருடைய சகோதரியுமான ஒய். எஸ். ஷர்மிளா விமர்சித்திருக்கிறார்.

"ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அவர் பேசினார். அப்போது சர்மிளா கூறியதாவது:-

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வந்திருந்தால், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். மாநில பிரிவினை மசோதாவில் இது தெரிவிக்கப்பட்டு இந்தும், பிரதமர் மோடியை இதுவரை யாருமே கேட்கவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில சிறப்பு அந்தஸ்தை கொண்டு வருவோம் என்று ஜெகன் வாக்குறுதி அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் கொண்டு வந்தாரா ? இந்த 5 ஆண்டுகளில் ஒரு நாளாவது மாநில சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக அவர் போராடினாரா? அதுவும் இல்லை.

ஆந்திர புதியதலைநகரான அமராவதியையாவது கட்டி முடித்தாரா ? அதுவும் இல்லை. குறைந்தபட்சம் ஆந்திராவுக்கு தலைநகரத்தைக்கூட கட்டி முடிக்காத முதல்வர் நமக்கு எதற்கு?

கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, மீதமுள்ள 6 மாதங்கள் விழித்திருப்பார். ஆனால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியோ 5 ஆண்டுகள் வரை தூங்கி உள்ளார். மாநிலத்தில் 23 ஆயிரம் ஆசிரியர்கள் பணி காலியாக இருந்தது.

அந்தப் பணியிடங்களை பூர்த்தி செய்யாத முதல்வர் தேர்தல் அறிவிப்புக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில், வெறும் ஆறு ஆயிரம் அரசு ஆசிரியர் பணிக்கான அறிவிப்பை ஜெகன் வெளியிட்டு உள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்துவேன். இல்லையேல் 2024-ம் ஆண்டில் ஓட்டு கேட்க மாட்டேன் என ஜெகன் கூறினார்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் மலிவு விலை மதுபானங்களை, அரசு கடைகளில் விற்றார். அந்த மதுபானங்கள் மிகவும் ஆபத்தானது. அதனை குடித்து ஏராளாமானோர் உயிரிழந்துள்ளனர். இது ஜெகனுக்கு தெரியாதா?"

இவ்வாறு ஒய். எஸ் ஷர்மிளா கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்