Logo
Logo

முக்கிய செய்தி:

வானிலை

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

SAMYUKTHA29-04-2024
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், 3 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக அதிகபட்ச வெயில் கொளுத்தி வருகிறது. அதனால் அங்கு தொடர்ச்சியாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 15 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடப்பட்டது. ஈரோட்டில் அதிகபட்ச வெயில் 108 டிகிரி இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ட்ரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு இருந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும். தெலங்கானாவில் 29ம் தேதி முதல் மே 1ம் தேதி வரையும், வெப்ப அலை வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மே 1ம் தேதி வரை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் 30ம் தேதி வரை வட தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையில் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்