Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஜம்முகாஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய பரிசீலக்கப்படும் – அமித் ஷா பேச்சு

PRIYA27-03-2024
ஜம்முகாஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய பரிசீலக்கப்படும் – அமித் ஷா பேச்சு

ஜம்முகாஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தனியார் ஊடகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்து தற்போது 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புப் படை பற்றி பேசி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து, படைகளை திரும்பப் பெறவும் அந்த பகுதியின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு முழுவதையும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் வசம் ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறினார். அப்போது, “ முன்னர் ஜம்மு காஷ்மீர் போலீஸ் நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை. இப்போது, அவர்கள் பல நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று நடத்துகின்றனர்.”, என்றார்.

சர்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அந்தஸ்து சட்டத்தை (ஏ.எப்.எஸ்.பி.ஏ) ரத்து செய்வது பற்றி கேட்கப்பட்டதற்கு, “ நாங்கள் சட்டத்தை ரத்து செய்வது பற்றி நாங்களும் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.”, என்றார்.

ஒரு பகுதி அல்லது மாவட்டம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தின் கீழ் அமைதியற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டால், அங்கு ஆயுதப்படை முழு அதிகாரத்துடன் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கையில் ஈடுபடும். இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு அதிகாரத்தினால், பாதுகாப்புப் படையினர் பொது ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக எந்த இடத்தையும் சோதனையிட, யாரையும் கைது செய்ய, அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும். இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்த சிறப்பு அதிகார சட்டம் வடகிழக்கு மாநிலங்களின் 70 சதவீதப் பகுதிகளில் இருந்து இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாகக் கூறினார்.

“ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி, அது கட்டாயம் நிறைவேற்றப்படும். அதே நேரத்தில் ஜனநாயகம் என்பது 3 குடும்பங்களுக்கானது அல்ல, அது மக்களின் ஜனநாயகமாக இருக்க வேண்டும்.”, என அமித் ஷா தெரிவித்தார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்