Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

காரைக்கால் மீனவருக்கு 6 மாத சிறை தண்டனை.. தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு..!

ESWAR27-03-2024
காரைக்கால் மீனவருக்கு 6 மாத சிறை தண்டனை.. தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு..!

காரைக்கால் மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒரு மீனவர் முருகானந்தத்திற்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என கதறி அழுது கண்ணீருடன் மீனவ பெண்கள் அறிவித்துள்ளனர்.

காரைக்கால் மீனவர்கள் 14 பேர் விடுதலை ஒரு படகோட்டி முருகானந்தத்திற்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிற்கு காரைக்கால் மீனவ பெண்கள் எதிர்ப்பு. மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என கதறி அழுது கண்ணீருடன் மீனவ பெண்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 13 தேதி கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முருகானந்தம், வேலுமணி, முருகன், கந்தகுமார், சுந்தரவேல், பாலமுருகன், வடிவேல், முருகன், இடும்பன், சந்துரு, சேகர், மோகன், பரசுராமன்,, மணிகண்டன், பாபு, ஆகிய 15 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கு அருகே கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி விசைப்படகையும், அதிலிருந்த 15 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகையும் இலங்கை காங்கேஷன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இழுத்து சென்றனர்.

இந்த நிலையில் சிறை காவல் தேதி முடிந்து இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் காரைக்கால் பகுதி சேர்ந்த 15 மீனவர்களில் ஒரு படகோட்டிக்கு ஆறுமாத சிறைதண்டனை விதித்தது. மீதமுள்ள 14 மீனவர்களையும் விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்த தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மீனவர் முருகானந்தத்தை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என காரைக்கால் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். மீட்டு தர கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க விட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மீனவ பெண்கள் கதறி அழுது கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்