Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மகாராஷ்ராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சி தனித்துப் போட்டி; 9 பேர் பட்டியலை வெளியிட்டார்

PRIYA27-03-2024
மகாராஷ்ராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சி தனித்துப் போட்டி; 9 பேர் பட்டியலை வெளியிட்டார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகித்த பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) கட்சி தனித்துப் போட்டியிட் உள்ளது. இதன் முதல் கட்டமாக 9 பேர் கொண்ட பட்டியலை பிரகாஷ் அம்பேத்கர் வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ், சிவ சேனா (யுபிடி), என்சிபி (எஸ்சிபி) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஷ் அகாடி கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர் கொள்கிறது. எதிர்க்கட்சிகள் சமீபத்தில் மும்பையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி தங்கள் பலத்தை பறைசாட்டின. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பிரகாஷ் அம்பேத்கரும் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டுப் போராளி மனோஜ் ஜரங்கே படேலுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரகாஷ் அம்பேத்கர் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் முதல் 9 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளார். அவரே விதர்பா பிராந்தியத்தில் உள்ள அகோலா தொகுதியில் களம் காண்கிறார்.

சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், அகோலா தொகுதியில் இருந்த 2 முறை எம்பியாக தேர்வாகி உள்ளார். ஒருமுறை மாநிலங்களவை எம்பியாக நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

நாக்பூர் தொகுதியில் காங்கிரசின் விகாஸ் தாக்ரேவுக்கு ஆதரவளிக்க விபிஏ முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் அம்பேத்கர், முக்கிய பெருங்கட்சிகளால் வாய்ப்பு அளிக்கப்படாத ஓ.பி.சி பிரிவினர், இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபிஏ கட்சியில் தலித்கள், பழங்குடியினர், தங்கர்கள், கோலிகள், அக்ரிகள், பஞ்ஜாராக்கள், கைகடிஸ் என பல சமுதாயத்தினர் உள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்