Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பட்டியலில் பெயர் வெளியான சில மணிநேரத்தில் சிவ சேனா (யுபிடி) வேட்பாளருக்கு இ.டி. நோட்டீஸ்

PRIYA27-03-2024
பட்டியலில் பெயர் வெளியான சில மணிநேரத்தில் சிவ சேனா (யுபிடி) வேட்பாளருக்கு இ.டி. நோட்டீஸ்

மகாராஷ்டரா மாநிலத்தில் சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) பிரிவு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அமலாக்கத்துறை அதன் வேட்பாளர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவ சேனா (யு.பி.டி) பிரிவு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் அமோல் கிர்திகர், மும்பை வட- மேற்குத் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது .

சிவ சேனாவின் தீவிர மூத்த தலைவர் கஜனான் கிர்திகர். தற்போது மும்பை வட-மேற்கு தொகுதி எம்பியாக இருக்கும் இவர், சிவ சேனா உடைந்த போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் சிண்டே பிரிவில் இணைந்தார். பாலாசாகிப் தாக்கரேவின் கீழ் சிவ சேனாவில் இணைந்த அரசியலில் ஈடுபட்ட இவர் சாமானி மக்களின் உரிமைக்காக களமாடிய ஸ்தானியா லோகாதிகார் சமிதி அமைய காரணமாக இருந்தவர்.

இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை அமோலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கோவிட் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி வழங்குவதில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மும்பை போலீசின் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழலில் நடந்த சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் குறித்து விசாரிக்க தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மகா விகாஸ் அகடி (எம்.வி.ஏ) கூட்டணியின் ஆட்சியில் தாக்கரே முதல்வராக இருந்த போது, ப்ரிஹான் மும்பை முனிசிபல் கார்பரேசனில் இந்த ஊழல் நடந்தது.

இது குறித்து சிவ சேனா (யு.பி.டி) மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், “அமோல் கிர்திகர் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே, அமலாக்கத்துறை பின்தொடர்கிறது… அரசியல் எதிரிகளை அமைதியாக்க பாஜக மேற்கொள்ளும் அழுத்தம் தரும் உத்தி தான் இது.”, என்றார்.

கிச்சடி ஊழலை வெளிப்படுத்திய பாஜக தலைவர் கிரித் சோமையா,“உத்தவ் தாக்கரேவின் வேட்பாளர் அமோல் கிர்திகர், கிச்சடி ஊழலில் ரூ. 1.65 கோடி பெற்றுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே சிவ சேனா (யு.பி.டி) தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டதாக, காங்கிரஸ் குற்றச்சாட்டை வைத்து வருகிறது. அமோல் கிர்திகர் போட்டியிடும் தொகுதியில் காங்கிரசின் சஞ்சய் நிருபம் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்