Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு... பின் சமாளித்த ஜி.கே.வாசன்

MARY RAJAKUMARI28-03-2024
கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு... பின் சமாளித்த ஜி.கே.வாசன்

நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சைக்கிள் சின்னத்துக்கு பதில் பழக்கதோஷத்தில் கை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கூறிவிட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் அலர்ட் செய்த நிலையில் அவர், கையை நகர்த்தி கொள்ளுங்கள் எனக்கூற வந்தேன் என்று சமாளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அங்கிருந்த தமாகா, பாஜக , பாமக நிர்வாகிகள் அதிர்ந்து போனார்கள்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்