Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சீமானை கடுப்பேற்றிய ’ரத்த கொதிப்பு’.... செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரம்

LENIN DEVARAJAN28-03-2024
சீமானை கடுப்பேற்றிய ’ரத்த கொதிப்பு’.... செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரம்

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ’மைக்’ சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட போது, ’ரத்த கொதிப்பு…ரத்த கொதிப்பு’ என்ற பாடல் அருகில் ஒலித்ததால் சீமான் ஆத்திரமடைந்து அருகில் இருந்த நிர்வாகியை முறைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ’மைக்’ சின்னம் ஒதுக்கியுள்ளது. அச்சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ’மைக்’ சின்னம் மற்றும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து சீமான் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் ”ரத்த கொதிப்பு..ரத்த கொதிப்பு” என்ற பாடல் ஒலிக்க சீமான் கடுப்பாகி அருகில் இருந்த கட்சி நிர்வாகியை முறைப்பார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே ’கரும்பு விவசாயி’ சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதால் சீமான் கடுப்பில் இருப்பதாக நா.த.க.வினர் கூறும் நிலையில், ”ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு” என்ற பாடல் ஒலித்ததால் சீமானின் தற்போதைய நிலையை வேண்டுமென்றே யாரோ பாடலாக ஒலிக்க செய்ததாக சமூக வலைதளங்களில் கிண்டலாக நெட்டிசன்கள் பதிவிடுகிறார்கள்.

தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கப்படுவதால் பொதுமக்களிடையே புதிய சின்னத்தை கொண்டு சேர்க்க சீமான் நொந்து நூடுல்ஸ் ஆவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

இதனால், சீமானுக்கு உண்மையிலேயே ரத்த கொதிப்பு அதிகமாகி இருகலாம் என பேசப்படும் நிலையில், எவ்வளவு போராடியும் ’கரும்பு விவசாயி’ சின்னம் கிடைக்காததால், புதிய சின்னமான ’மைக்’ லோகோவை வெளியிடும் போதும் ’ரத்த கொதிப்பு…ரத்த கொதிப்பு’ என்ற பாடல் அருகில் ஒலிக்கப்பட்டதால் சீமானுக்கு மேலும் ரத்த கொதிப்பு அதிகரித்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் எதிர்கட்சியினரும் கலாய்க்கிறார்கள்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்