Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

விஜய் உடன் சேர்ந்து பணியாற்ற தயார் – ரவீந்திரநாத்

MARY RAJAKUMARI28-03-2024
விஜய் உடன் சேர்ந்து பணியாற்ற தயார் – ரவீந்திரநாத்

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் நடிகர் விஜய் உடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி. ரவீந்திரநாத், திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன் என்று அவரே கூறியிருக்கிறார்.

தேனி மக்களுக்கு டிடிவி தினகரன் மிகவும் பரிச்சயமானவர். நான் வேறு அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. அதன் காரணமாகவே டிடிவி தினகரனுக்கு தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தோம்.

மேலும் பேசிய அவர் ஜனநாயக நாட்டில் அனைவரும் அரியலுக்கு வரலாம். நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அடுத்தக்கட்ட முயற்சியாக அரசியல் கட்சி தொடங்கி விட்டார். அந்தப் பாதையில் பயணித்து தமிழக மக்களுக்கு ஒரு நல்ல பாதைய வகுத்துத் தந்தால் அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்