Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்குவதே சிஏஏ திருத்தத்தின் நோக்கம் – கேரள முதல்வர் விஜயன் குற்றச்சாட்டு

PRIYA28-03-2024
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்குவதே சிஏஏ திருத்தத்தின் நோக்கம் – கேரள முதல்வர் விஜயன் குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெறுப்புணர்வு சித்தாந்தத்தை சட்டப்பூர்மாக்குவதற்காகவே சிஏஏ சட்டத் திருத்தம் மேற்க்கொள்ளப்பட்டு இருப்பதாக கேரள முதல்வர் பினாராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

கேரளாவில் கொல்லத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் பினாராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது –

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தம், வெறுப்புணர்வு என்பதை நாம் அனைவரும் அறிவோம். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிப்பது என்பது அரசியல்சாசனத்துக்கும் ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது.

இதனை, அடிப்படை கொள்கைகள் மீறப்படுவதாகத்தான் நாம் பார்க்க வேண்டும். குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறம் சட்டங்களை உருவாக்க எந்த அரசுக்கு உரிமை இல்லை. இதனை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சட்டம் அரசியல்சாசனம் வழங்கும் உரிமைகளை மீறுகிறது. நமது அரசியல்சாசனம், சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை அளிக்கிறது.

மக்கள் இஸ்லாமியர்கள், இஸ்லாம் அல்லாதவர்கள் என பிரிக்கப்படுகின்றனர். இது எந்த நிலையிலும் நடக்க அனுமதிக்கக் கூடாது. சங்பரிவார்கள் மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. இந்த சித்தாந்தத்தை சட்டப்பூர்வமாக்கவே சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ‘இந்தியா‘ என்ற சிந்தனைக்கு எதிரான சவால்.

திருவனந்தபுரத்தில் போராட்டத்தை நடத்தினோம். எதிர்க்கட்சியினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கு சிஏஏ இங்கு அமல்படுத்தபடாது என அறிவித்து விட்டோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது, சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டு சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு இது தொடர்பான கடிதம் எழுதி உள்ளோம். சிஏஏக்கு எதிராக குரல் கொடுத்த முதல் மாநிலம் கேரளாதான்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்த ஆண்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பல தீவிர மதவாத செயல் திட்டங்களை ஆர்எஸ்எஸ் வைத்துள்ளது. இது அதன் ஒரு பகுதிதான் .

இவ்வாறு அவர் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்கிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்