Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

நடிகர் சிவராஜ்குமார் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது - தேர்தல் ஆணையம் உறுதி

SAMYUKTHA28-03-2024
நடிகர் சிவராஜ்குமார் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது - தேர்தல் ஆணையம் உறுதி

மக்களவை தேர்தலில் மனைவி போட்டியிடுகிறார் என்பதற்காக நடிகர் சிவராஜ்குமார் நடித்தியுள்ள திரைப்படங்கள் திரையிட தடை விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் ஷிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கீதா சிவராஜ்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா ஓபிசி மோர்ச்சா சார்பில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனாவிடம் கடந்த வாரம் மனு கொடுத்தனர். அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் வரும் மக்களவை தேர்தலில் ஷிவமொக்கா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மட்டுமில்லாமல், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிவராஜ்குமார் பரப்புரை செய்வதாக தெரிவித்துள்ளார். ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் நடிகரின் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது. மேலும் அவர் விளம்பர தூதராக இருக்கும் நிறுவனங்களின் விளம்பரம் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பாரதிய ஜனதா ஓபிசி சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற காரணத்திற்காக அவர் நடத்தியுள்ள திரைப்படங்கள், விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் டி.டி தொலைக்காட்சியில் வேண்டுமானால் தடை விதிக்கலாம். தனியார் தொலைக்காட்சியில் தடை விதிக்க சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்