Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

குரூப் 1 பதவியில் 90 பணியிடங்கள் காலி - ஜூலை 13ல் முதல்நிலை தேர்வு

SAMYUKTHA28-03-2024
குரூப் 1 பதவியில் 90 பணியிடங்கள் காலி  - ஜூலை 13ல் முதல்நிலை தேர்வு

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அந்த வகையில் 2024க்கான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. அதில் துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்-21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 என 90 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வு அறிவிப்பு வெளியான நேற்று முதல் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 27 இரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் மே 2ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 4ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 13ம் தேதி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதை தொடர்ந்து மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி, என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உடற்தகுதி, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், தேர்வு கட்டணம் போன்ற அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்