Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

கணேசமூர்த்தி வேண்டா வெறுப்பா தான் திமுகவில் இணைந்து எம்.பி. ஆனார் – வைகோ பேச்சு

LENIN DEVARAJAN28-03-2024
கணேசமூர்த்தி வேண்டா வெறுப்பா தான் திமுகவில் இணைந்து எம்.பி. ஆனார் – வைகோ பேச்சு

திராவிட இயக்க சரித்திரத்தில் கொங்கு மண்டலத்தில் அழியா புகழோடு ஒரு நட்சத்திரமாக கணேசமூர்த்தி திகழ்வார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கடந்த மார்ச் 24-ம் தேதி அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கடந்த சில நாட்களாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தியை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 4 நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

”திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததால் தான் அங்கு சீட் கொடுக்க முடியும் என்ற நிலையில், வேண்டா வெறுப்பாக தான் திமுகவில் உறுப்பினராக சேர்ந்த பிறகு அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார். திமுக உறுப்பினராக இருந்துகொண்டு வேறொரு பொறுப்புக்கு வர வேண்டும் என்றால் அதை ராஜினாமா செய்து தான் வர வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதில் உங்களுக்கு விருப்பமான, வெற்றி வாய்புள்ள தொகுதியில் நின்று வெற்றிபெறலாம் என்று நான் சொன்னேன். நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு சீட் கொடுத்தால் பாருங்கள், ஒரு சீட் மட்டுமே கொடுத்தால் துரை வைகோ போட்டியிடட்டும் என கணேசமூர்த்தி சொன்னார்கள். கணேசமூர்த்தியும் நானும் உயிருக்கு உயிராக கடந்த 50 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம்.

தியாகராசர் கல்லூரியில் திமுக மாணவர் அணியின் தலைவராக கணேசமூர்த்தி இருந்தார். அறிஞர் அண்ணாக்கு பரிட்சயமானார்.

ஆனால், கடந்த சில நாட்களாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது மகனும் மாவட்ட செயலாளர்களும் சொன்னார்கள். அது குறித்து நான் இங்கு விவரிக்க விரும்பவில்லை.

ஆனால், துரை வைகோக்கு சீட் வழங்குவது குறித்து அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். நாளேடுகளில் கணேசமூர்த்திக்கு சீட் கொடுக்கவில்லை என்பதால் தான் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி 1% கூட உணமையில்லை. திராவிட இயக்க சரித்திரத்தில் கொங்கு மண்டலத்தில் அழியா புகழோடு ஒரு நட்சத்திரமாக கணேசமூர்த்தி திகழ்வார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்”, இவ்வாறு வைகோ பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்