Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சி...கூட்டணிக்கட்சிக்குள்ளேயே குத்து வெட்டு

ABDUL MUTHALEEF28-03-2024
திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சி...கூட்டணிக்கட்சிக்குள்ளேயே குத்து வெட்டு

திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப்பதிவு செய்ய உளவுத்துறையே ஈடுபடுபட்டு லீகல் ஒப்பினியன் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவினர் வற்புறுத்தலால் இந்த நடவடிக்கை கூட்டணிக்கட்சிக்குள்ளேயே குத்துவெட்டு காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதா என காங்கிரஸார் கொந்தளிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தேர்வை இறுதிப்படுத்துவது, தங்களுக்கான சின்னத்தை கேட்டுப்பெறுவது என பலகட்ட போராட்டம் நடந்துவரும் நிலையில் திமுக கூட்டணிக்குள்ளும் குத்துவெட்டு கருத்துமோதல் நடக்க ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிப்பது பெரிய போராட்டத்துக்குப்பின் தான் நடக்கும். ஆனால் ஆரம்பம் முதலே திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான் என சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் அவரையே டெல்லி மேலிடம் அறிவித்தது.

அவரும் வேட்புமனு தாக்கல் அன்று திமுக எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்களுடன் வேட்புமனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் 4 பேருக்கு பதில் 5 பேர் இருப்பதை தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் சுட்டிக்காட்டியதை அடுத்து எம்.எல்.ஏ சந்திரசேகரன் வெளியில் சென்றார். அதன் பின்னர் வேட்புமனுதாக்கல் செய்தார் சசிகாந்த் செந்தில். இந்நிலையில் அவர்மீது வழக்குப்பதிவு செய்ய உளவுத்துறை அதிகாரிகள் சிலர் பரிந்துரையின்பேரில் லீகல் ஒப்பீனியன் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடாவடியாக ஐந்துபேருடன் வந்து தேர்தல் விதியை மீறி நடப்பேன் என்று ஐந்துபேருடன் மனுதாக்கல் செய்திருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால் சுட்டிக்காட்டப்ப்பட்டவுடன் ஒருவர் வெளியில் சென்றவுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் உடன் வந்தவர்கள் அனைவரும் திமுக மா.செக்கள். இந்நிலையில் வழக்குப்பதிவு என்பது கேலிக்குறிய ஒன்று என காங்கிரஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே நேரம் வட சென்னை திமுக வேட்பாளர்( அதுவும் டம்மி வேட்பாளருக்காக) மேயர் பிரியா உள்ளிட்ட கட்சிக்காரர்கள் புடைச்சூழ தேர்தல் அலுவலரிடம் அமர்ந்து வாக்குவாதம் செய்து போகச்சொல்லியும் போகமறுத்து தேர்தல் அலுவலர் எதிரிலேயே அதிமுக மா.செவை வாடா போடா என ஒருமையில் பேசினார், கூடுதல் ஆட்களுடன் அறையில் இருந்தார் என அதிமுக நிர்வாகி டி.ஜெயக்குமார் பேட்டியில் குற்றச்சாட்டு வைத்தும், அதிமுக வேட்பாளர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால் சசிகாந்த் செந்தில் விவகாரத்தில் கூட்டணிக்கட்சியினர் தூண்டுதலினாலேயே இந்த நடவடிக்கை என்கின்றனர் காங்கிரஸார். சசிகாந்த் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சித்தலைவர் ராகுலுக்கு நன்றி தெரிவித்திருந்தார் அதில் ஸ்டாலின் பேரை குறிப்பிடவில்லை என பிரச்சனை எழுந்தது. அதன் பின் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தி பதிவு செய்ததில் குற்றம் கண்டுபிடித்து வாழ்த்தையே நக்கல் அடிக்கிறார் என எடுத்து மேலிடம் வரை கொண்டுச் சென்று தேவையில்லாமல் ஆளுங்கட்சியினர் பிரஷரில் உளவுத்துறையின் சில அதிகாரிகளும் அதை ஏற்று லீகல் ஒப்பீனியனுக்கு அனுப்பியுள்ளனர் என காங்கிரஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுகவினர் கூட்டணி கட்சிகளை எப்போதும் கிள்ளுக்கீரையாகத்தான் மதிப்பார்கள். தங்கள் கட்சியின் விழுதாக இருந்து வளர்த்த வைகோவின் மகனுக்கு கொடுக்கும் இடையூறை அவர் அழுது ஆவேசப்பட்டு பொதுமேடையில் சொன்னதை சுட்டிக்காட்டும் காங்கிரஸார் இது காங்கிரஸுக்கும் நடக்கிறது என குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்